சொல் பொருள்
கண்டது – கண்ணில் கண்ட பொருள்களும் கையிற்குக் கிடைத்த பொருள்களுமாம்.
கழியது – உடலுக்கு ஒவ்வாத பொருள்களும் பதனழிந்து போன பொருள்களுமாம்.
சொல் பொருள் விளக்கம்
கண்டதைக் கழியதைக் குழந்தைகள் மட்டும் தின்பதில்லை. வளர்ந்த பின்னரும் வாழ்நாளெல்லாம் உணவு வகையில் மட்டும் இருப்பார் உளரல்லரோ! அவர் பிறப்பின் பயனே உண்டியிலே தான் இருக்கிறது என்று கொண்டவர்கள். அவர்கள் எது கிடைத்தாலும் அடைத்துக் கொண்டே இருப்பர். அவர்கள் உடலுக்கு ஒவ்வாததும் உண்பர்; உணவுக்கு ஆகாததையும் உண்பர். பிறகு மருந்து மாத்திரைக்குத் திரிவர். ஆயினும் ‘கண்டது கழியதை’ விடவே மாட்டார். கண்டதைத் தின்பது கேடு; அதனினும் கேடு கழியதைத் தின்பது. “கண்டதை; கழியதைத் தின்னாதே” என்பதோர் அறிவுரை.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்