Skip to content

கண்ட துண்டம்

சொல் பொருள்

கண்டம் – கண்டிக்கப் பெற்றது கண்டம்.
துண்டம் – கண்டத்தைத் துண்டிக்கப் பெற்றது துண்டாம்.

சொல் பொருள் விளக்கம்

கண்டம் பெரியது; துண்டம் கண்டத்தில் சிறியது என்க.

கண்ட கோடரி என்பது கோடரியுள் ஒன்று. மரம் வெட்டுவார் கண்டி வைத்து வெட்டுதல் கண்கூடு. உப்புக் கண்டமும், நிலப்பிரிவாம் கண்டமும் அறிந்தவையாம்.

துண்டம் – துண்டிக்கப்பட்டது எனினும் இவண் கண்டித்ததைத் துண்டித்தது என்க. துண்டு, அறுவை, வேட்டி முதலியவற்றைக் கருதினால் பாவில் இருந்து அறுத்தெடுக்கப்படுதலால் பெற்ற பெயர்கள் என்பது புலனாம்.

கண்ட துண்டத்தைத் ‘துண்ட துண்டம்’ என்பார் அருணகிரியார்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *