Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கண்ணால் கண்டு கொள்ளும் அச்சம், 2. கறி,

சொல் பொருள் விளக்கம்

கண்ணால் கண்டு கொள்ளும் அச்சம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fear at the mere sight of a thing

curry, relish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற
உத்தி ஒரு காழ் – கலி 96/12,13

கண்ணால் கண்டு அஞ்சும் சாட்டையாக, அழகு பெற்ற
தெய்வவுத்தியிலிருந்து ஒரு வடமாகத் தொங்கும் சுட்டி விளங்கவும்

அரும் சீர்த்தி பெரும் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க – புறம் 15/18,19

எய்தற்கரிய மிக்க புகழையுடைய சமிதையும் பொரியும் ஆகிய பெரிய கண்ணுறையோடு
நெய் மிக்க புகை மேன்மேல் கிளற
– சமிதை – யாகத்துக்குரிய சுள்ளிகள்

பழன வாளை பரூஉ கண் துணியல்
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக – புறம் 61/4,5

பொய்கையிடத்து வாளையினது பரிய இடத்தையுடைய துண்டத்தை
புதிய நெல்லினது வெள்ளிய சோற்றிற்கு மேலீடாகக் கொண்டு
– கண்ணுறை – வியஞ்சனம் – சோற்றுடன் துணையாய் உண்ணப்படுவது – ஔ.சு.து.விளக்கம்

வளை கை விறலியர் படப்பை கொய்த
அடகின் கண்ணுறை ஆக யாம் சில
அரிசி வேண்டினமாக – புறம் 140/3-5

வளை அணிந்த கையையுடைய விறலியர் மனைப்பக்கத்தின்கண் பறித்த
இலைக்குமேல் தூவுவதாக யாங்கள் சில
அரிசி வேண்டினேமாக
– கண்ணுறை – வியஞ்சனம் – துணைக்கறி – ஔ.சு.து.விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *