சொல் பொருள்
1. (வி) 1. இடம் மாறு, 2. தோன்றி அக்கணமே மறை, 3. அசட்டையாயிரு, புறக்கணி,
2. (பெ) அருள், இரக்கம், கண்ணோட்டம்,
சொல் பொருள் விளக்கம்
இடம் மாறு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
change one’s place, appear and disappear in a twinkling, be indifferent to, neglect – Tamil Lexicon, compassion
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விழவு மேம்பட்ட என் நலனே ——————— ——————– தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே – குறு 125/4-7 திருவிழாவைப் போல் சிறந்த என் பெண்மை நலன், ———————- ——————– குளிர்ந்த அழகிய துறையையுடையவனோடு என்னைவிட்டுப் பிரிந்து இடம் மாறிப் போனது – கண்மாறுதல் – இடமாறுதல் – உ.வே.சா உரை விளக்கம் கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642 காட்சியினின்றும் (சடுதியில்)மறையும் கள்வர் ஒதுங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து, கனை பெயல் நடுநாள் யான் கண்மாற குறி பெறாஅன் – கலி 46/18 பெருமழை பெய்கின்ற நள்ளிரவில் நான் அசட்டையாய் இருந்துவிட்டதால் அவனுடைய சமிக்கையை நான் கவனிக்காமல்விட பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா ஏறி மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் நல்காள் கண்மாறிவிடின் என செல்வான் – கலி 61/22-24 பலரும் சிரித்து இகழ்கின்ற மடல்மாவில் ஏறி செல்வம் கொழிக்கும் இவளின் ஊரின் நடுவில் வந்து நிற்பேன், நறிய நெற்றியையுடையவள் எனக்கு அருள்தராமல் என்னைப் புறக்கணித்தால் என்று கூறிச் செல்கின்றவன் – கண்மாறிவிடின் – மறுத்துவிட்டால் – மறந்துவிடின் – மா.இராச. உரை, விளக்கம் – அருளை மாறியேவிடின் – நச்.உரை அண்ணல் யானை வழுதி கண்மாறு இலியர் என் பெரும் கிளை புரவே – புறம் 388/15,16 பெருமிதம் மிக்க யானையையுடைய வழுதி என் பெரிய சுற்றத்தைப் பாதுகாக்கும் அருளைச் செய்யாதிருப்பானாக – ச.வே.சு.உரை தலைமைபொருந்திய யானைப்படையாற் சிறந்த வழுதி என்னுடைய பெரிய சுற்றத்தாரைப் புரத்தற்குவேண்டும் கண்ணோட்டத்தினின்றும் ஒழிவானாக – கு.வெ.பா.உரை (NCBH)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்