சொல் பொருள்
(வி) 1. விளையாடு, 2. தோன்று, 3. வெறு, 4. கோபி, சினம் கொள்,
2. (பெ) 1. வழி, 2. இயக்கம், 3. இயல்பு, தன்மை,
சொல் பொருள் விளக்கம்
விளையாடு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
play, appear, hate, detest, be angry with, way, path, motion, movement, nature, characteristic
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி – நற் 352/5 தன் நிழலைப் பார்த்து மகிழ்ந்து விளையாடுகின்ற, நிணத்தை விரும்பும் கிழட்டு நரி – கதித்தல் – விளையாடுதல் – பின்னத்தூரார் உரை, விளக்கம் புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4 அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகத் தோன்றிய புள்ளிகளையுடைய முதிய பருந்தானது -புலியூர்க்கேசிகன் உரை, விளக்கம் புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு – நற் 329/4 ஈன்ற அணிமையால் நெருங்காது வெறுத்துக் கடந்து போன புள்ளிகளையுடைய முதிய பருந்து – பின்னத்தூரார் உரை – கதித்த – வெறுத்த – கு.வெ.பா.உரை விளக்கம் (NCBH) அணை மென் தோளாய் செய்யாத சொல்லி சினவுவது ஈங்கு எவன் ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/6-8 “மெத்தை போன்ற மென்மையான தோள்களையுடையவளே! நான் செய்யாதவற்றைச் சொல்லிக் கோபிப்பது இங்கு எதற்காக? சந்தேகப்பட்டு என்மேல் சினங்கொள்ளாதே! என்னிடத்தில் தவறு இல்லை என்பதைத் தெய்வத்தின் பேரில் தெளிவிக்கிறேன், காண்பாயாக! முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம் இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள் கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/9-12 வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள், கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெருக இட்டு வெல்லும் நெறியல்லாத நெறியிலே சூது ஆடுவதினாலே, கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ? – நச்.உரை. கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும் – புறம் 229/21 காற்றுப்போலும் இயலையுடைய மனம் செருக்கிய குதிரைகள் இயக்கமின்றிக் கிடக்கவும் முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல் – பரி 8/17,18 முதல்வனே! உன் ஊர்தியாகிய யானை பிளிறும் ஒலியின் முழக்கத்தைக் கேட்ட தன்மையது முகிலின் இடிக்குரல்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்