சொல் பொருள்
கதைவிடல் – புனைந்து கூறல்
சொல் பொருள் விளக்கம்
கதை என்பது கற்பனையாகக் கூறுவது. சிறிய நிகழ்ச்சி அல்லது செய்தி கொண்டு, கட்டுமானத்தால் விரித்துக் கூறுவதும் அதுவே. நிகழாததை நிகழ்ந்ததாகவும், சொல்லாததைச் சொன்னதாகவும் இட்டுக்கட்டிக் கூறுபவரைக் ‘கதை விடுகிறார்’ என்றும், ‘கதைவிடுதலில் பெரிய ஆள்’ என்றும் கூறுவதுண்டு. கயிறு திரித்தல், சரடுவிடல் என்பனவும் கதை விடல் போல்வனவே.
இது ஒரு வழக்குச் சொல்
பார்க்க எடுத்துவிடல், கயிறு திரித்தல், பொய் புளுகு, கயிறு உருட்டல், கதைவிடல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்