கரந்தை என்பதுஒரு மரம், ஒரு செடி, ஒருதிணை
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு மரம், ஒரு செடி, திருநீற்றுப்பச்சை, வயல் புறத்தில் விளையும் ஒரு கொடி, துறை, திணை
2. சொல் பொருள் விளக்கம்
தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது. புறத்திணைகளுள் வெட்சிக்கு அடுத்து வைக்கப்படுவது, வெட்சிக்கு எதிரான அல்லது மாறான, கரந்தைத் திணையாகும். பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆ நிரைகளை மீட்டுவருவதே இத்திணையாகும்.
வெட்சி நிரை கவர்தல் ; மீட்டல் கரந்தையாம்
விஷ்ணு கரந்தை, மூலிகைக்கரந்தை, கொட்டைக்கரந்தை
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Iron-weed, Vernonia arborea
Fragrant Basil, Ocinum basilicum.
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அனைக்கு உரி மரபினது கரந்தை அன்றியும் - பொருள். புறத்:5/14
கொடிவகையைச் சேர்ந்த கரந்தை வயல்வெளியில் படரும். காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் – பதி 40/5 ‘காய் காய்த்த கரந்தையின் கரிய கொடி விளைகின்ற வயலில் கரந்தை சிவப்பு நிறத்தில் பூக்கும். செம் பூ கரந்தை புனைந்த கண்ணி – அகம் 269/11 சிவந்த கரந்தைப் பூவைத் தொடுத்து இயற்றிய கண்ணி. கரந்தையின் பூ பசுவின் முலைக்காம்பு போல் இருக்கும். மணம் மிக்கது. நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/13 இளைய பசுவின் மடிக்காம்பினைப் போன்ற நறிய பூவைக்கொண்ட கரந்தை கரந்தை குளவி கடி கமழ் கலி மா - குறி 76 கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் - ஐங் 26/1 காய்த்த கரந்தை மா கொடி விளை வயல் - பதி 40/5 கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் - அகம் 226/6 செம் பூ கரந்தை புனைந்த கண்ணி - அகம் 269/11 நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை/விரகு அறியாளர் மரபின் சூட்ட - புறம் 261/13,14 கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் - புறம் 269/9 கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் - புறம் 340/8 கரந்தை அலற கவர்ந்த இன நிரைகள் - மது:12/133 கட்சியும் கரந்தையும் பாழ்பட - மது:12/166 கரந்தை மத்தமோடு எருக்கு அலர் கூவிளை கடுக்கை - பால-மிகை:9 48/1 கரந்தை சூடியும் பாற்கடல் கள்வனும் - யுத்3:29 11/3 தாரோடு தண் கரந்தை சடைக்கு அணிந்த தத்துவனார் தங்கும் கோயில் - தேவா-சம்:1398/2 நளிரும் மலர் கொன்றையும் நாறு கரந்தை துளிரும் சுலவி சுடுகாட்டு எரி ஆடி - தேவா-சம்:1846/1,2 கண்டுகோடலும் அரியார் காட்சியும் அரியது ஒர் கரந்தை வண்டு வாழ் பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே - தேவா-சம்:2491/3,4 படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு - தேவா-சம்:3405/2,3 அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே - தேவா-சம்:3884/4 காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன் - தேவா-அப்:2851/3 கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி - தேவா-சுந்:776/1 துணி சிர கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய் - தேவா-சம்:2534/2 கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம் - தேவா-சுந்:984/1 அறுகு தாளி நறை அவிழ்ந்த குவளை வாச மலர் கரந்தை அடைய வாரி மிசை பொழிந்து உன் அடி பேணி - திருப்:231/3 பிறை கரந்தை கொத்து பணி மத்தம் தலை எலும்பு அப்பு கொக்கு இறகு அக்கம் - திருப்:315/9 நதியும் திரு கரந்தை மதியும் சடைக்கு அணிந்த நடநம்பர் உற்று இருந்த கயிலாய - திருப்:466/5 சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசிகா கடம்பு அலங்கல் புனைவோனே - திருப்:734/7 பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே - திருப்:735/6 இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும் பரன் தன் அன்பில் வந்த குமரேசா - திருப்:835/7 வால இள பிறை தும்பை ஆறு கடுக்கை கரந்தை வாசுகியை புனை நம்பர் தரு சேயே - திருப்:841/5 ஏர் கரந்தை அறுகோடு கொன்றை மதி ஆறு அணிந்த சடையார் விளங்கும் எழில் - திருப்:855/15 செய்க்கொண்ட கழுநீர் அலங்கல் கரந்தை திருத்தாமன் மேல் - வில்லி:22 13/3 காட்டு மா வல்சியர் கரந்தை பாழ்பட - உஞ்ஞை:52/76
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்