Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. கண்ணீர் வடி,அழு, 2. ஒழுகு, 3. இடம்பெயர், 

2. (பெ) கலிழி, கலங்கல் நீர்,

சொல் பொருள் விளக்கம்

கண்ணீர் வடி,அழு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

weep, shed tears, shine forth (as beauty), change position, muddy water, puddle

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கண் கலிழ் உகு பனி அரக்குவோரே – குறு 398/8

கண்கள் கண்ணீர் வடிப்பதால் வீழ்கின்ற துளியைத் துடைப்போரை 

தண் கடல் வளையினும் இலங்கும் இவள்
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/3-4

குளிர்ந்த கடலின் சங்கினைக் காட்டிலும் வெளுத்துப்போய்த் தோன்றுகிறது இவளின்
அழகொழுகும் மேனி, இதோ பார், அவனை நினைத்து

காலொடு மயங்கிய கலிழ் கடல் என – பரி 8/31

காற்றினால் மோதி அடிக்கப்பட்டு, கரைக்கு இடம்பெயர்ந்து வரும் கடலின் முழக்கத்தைப் போலவும்,

கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று நின் ஊரே – ஐங் 45/1-3

குளிர் காலத்தில் குளிர்ந்த கலங்கல் நீரைத் தந்து
வேனில் காலத்தில் நீலமணி போன்ற நிறத்தைக் கொள்ளும்
ஆற்றினைக் கொண்டுள்ளது உனது ஊர்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *