சொல் பொருள்
கல் – வளமற்ற பாறை அல்லது குன்று
கரடு – கல்லும் மண்ணும் கலந்த திரடு.
சொல் பொருள் விளக்கம்
வளமானது மலை; வளமற்றது கரடு என்க. கரடு முரடு என்பதில் கரடு பற்றிய குறிப்பைக் காண்க.
‘கல்’ என்பது கரடு என்பதன் இணைச்சொல்லாக வந்தமையால் தனிக்கல்லைக் குறிக்காமல் நீர்ப்பசையற்று வறண்ட ‘கல்லாஞ் சரளை’ எனப்படும் நிலப்பகுதியைக்குறிக்கும் என்க. கல்லும் கரடுமாய இடம் ‘பாலை’ எனப்படும்.“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து, நல்லியல் பழிந்து நடுங்கு துயர் உறுத்துப், பாலை என்பதோர் படிவம் கொள்ளும்” என்பது சிலம்பு. கல்லும் கரடுமாய வழி ‘கல்லதர் அத்தம்’ என இலக்கியங்களில் ஆளப்படும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்