சொல் பொருள்
(பெ) ஒரு சேரமன்னனின் பட்டப்பெயர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சேரமன்னனின் பட்டப்பெயர், களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல், பண்டைத் தமிழகத்தின் சேர மரபைச் சேர்ந்த ஒரு மன்னன். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்து இவனைப் பாடுகிறது.
களாக்காய் போன்ற கருநிற மணிகளையும், முத்துக்களையும் பொன் இழைகளில் கோத்து பட்டுத்துணியில்
வைத்துத் தைத்துச் செய்த மாலையை இவன் தலைமுடியாக (தலைப்பாகை போன்ற மகுடம்)
அணிந்துகொண்டிருந்தான் என்று பதிற்றுப்பத்து 39 கூறுகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the title name of a chEra king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உலகத்தோரே பலர்-மன் செல்வர் எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் – பதி 38/1-4 இந்த உலகத்தாரில் பலர் இருக்கிறார்கள் செல்வர்கள், அவர் எல்லாரிலும் உனது நல்ல புகழே மிகுந்திருக்கும்! பலவகையான வளங்கள் ஒன்றுகூடிக் கலக்கும் வகையில் நாட்டைச் செம்மை செய்த களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே! குடாஅது இரும் பொன் வாகை பெருந்துறை செருவில் பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய் வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் இழந்த நாடு தந்து அன்ன வளம் பெறிது பெறினும் வாரலென் யானே – அகம் 199/18-24 பெரிய பொன்னினையுடைய வாகை மரம் நிற்கும் பெருந்துறை என்னுமிடத்து நிகழ்ந்த போரில் பொற்பூண் அணிந்த நன்னன் என்பவன் போர்செய்து களத்தில் மடிய வென்ற வெற்றியினைத் தந்த வாய்ந்த வாளினையுடைய களங்காய்ச் சென்னி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னன் தான் முன்பு இழந்த நாட்டைப் பெற்றால் ஒத்த பெரிய செல்வத்தைப் பெறுவதாயினும் வருவேன் அல்லேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்