Skip to content

கள்ளும் சுள்ளும்

சொல் பொருள்

கள் – கள்ளு, சாராயம் முதலிய மதுவகை
சுள் – மதுக்குடிக்குத் துணையாம் தொடு கறிவகை.

சொல் பொருள் விளக்கம்

சுள் என்பது சுள்ளாப்பு என்றும் சொல்லப்படும். சுள்ளாப்பு என்பதற்கு அடி, உறைப்பு, வெப்பம் முதலிய பொருள்கள் உண்டு; வெயில் சுள்ளப்பாக அடிப்பது போலச் சுள்ளாப்பாக இருக்கும் சுவையும் சுள்ளாப்பு எனப்பட்டது. சுள்ளக்காய், சுள்ளாக்காய் என்பவை மிளகாயைக் குறித்து வழங்குகின்றன; மிளகாய் பிற்காலத்து வெளிநாட்டு வரத்துப் பொருளாயினும் ‘மிளகு’ பழம் பொருளாம்; கறிக்குச் சுவையூட்டும் அது ‘கறி’ என்றே சொல்லப்பட்டது. ‘யவனர்’ தந்த வினைமாண் நன்கலம் பொன்னோடு வந்து கறியொடு பெயரும் என்பது சங்கப்பாட்டு.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *