சொல் பொருள்
(பெ) ஒரு சோழநாட்டு ஊர்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு சோழநாட்டு ஊர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a city in chozha country
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கழார் என்னும் ஊர் சோழநாட்டுக் காவிரியின் வடகரையில் இருந்தது. இப்போது அது மறைந்து போயிற்று ஒரு காலத்தே இவ்வூர் மத்தி என்னும் குறுநிலத்தலைவனுக்கு உரியதாய் இருந்தது. இக்கழார் காவிரியின் வடகரைத் துறைகள் ஒன்றில் இருந்தமையின் இவ்வூர்ப் பெயரால் அத்துறை கழார் முன்துறை என்றும் கழார்ப் பெருந்துறை என்றும் குறிக்கப்படுகின்றது. ஆதிமந்தியின் கணவன் ஆட்டனத்தி பெருவெள்ளத்தால் கொண்டுபோகப்பட்டது இந்ததுறையில்தான். வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் நல் வகை மிகு பலி – நற் 281/3,4 வெல்லுகின்ற போரையுடைய சோழரின் கழார் என்ற ஊரில் கிடைக்கும் நல்ல வகையில் மிகுந்த பலியுணவு கைவண் மத்தி கழாஅர் அன்ன – ஐங் 61/3 பல் வேல் மத்தி கழாஅர் அன்ன – அகம் 6/20 கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் – அகம் 222/5 பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை – அகம் 226/8 ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை – அகம் 376/4 பார்க்க மத்தி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்