Skip to content

சொல் பொருள்

காடாக்கல் – அழித்தல், கெடுத்தல்

சொல் பொருள் விளக்கம்

காடாக்குதல் கட்டாயம் வேண்டத் தக்கதே. மழையின் குறைவுக்குக் காட்டை அழித்ததே அடிப்படை. காலத்தில் மழையின்றி விளைவு இன்றி நாடு அல்லல்படுவது காடு அழிவாலேயாம். ஆதலால் காடாக்கல் நல்லதே எனினும், இக்காடு ஆக்கக்காடன்று; அழிகாடு! ஆம்! சுடுகாடு. சோலையாக இருப்பதையும் பாலையாக மாற்றுவார் உண்மையில் அத்தகையரைக் காடாக்குவார் என்பது வழக்கமாயிற்றாம். “கல்லுழி மங்கான் போன வழி காடுமேடு” என்பது பழமொழி.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *