சொல் பொருள்
காரம் – உறைப்புச் சுவை
சாரம் – மற்றைச் சுவை
சொல் பொருள் விளக்கம்
குழம்பு காரசாரமாக இருக்கிறது; காரசாரம் இல்லாமல் சப்பு என்று இருக்கிறது என்பவை வழக்குகள். ‘காரச்சேவு’ ‘காரவடை’ என்பவை தின்பண்டங்கள். மிளகு ‘காரமிளகு’ எனவும் படும்.
சாரம்-சார்ந்தது. காரத்தைச் சார்ந்த பிற சுவைகள். சாரம் என்பதற்கு இனிமைப் பொருள் உண்டாயினும், பிற சுவைகளைச் சுட்டலே சிறக்கும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
‘சாரம்’ என்ற சொல்லுக்கு ‘சார்ந்த’ என்று பொருள் கொள்வது இங்கு பொருத்தமானதாக இருக்காது என்பது என் கருத்து.
‘சாரம்’ எனும் சொல் ஒரு பொருளின் முக்கியக் குணத்தைக் குறிப்பதாக பலவமயம் கையாளக் கண்டிருக்கின்றோம்.
உ-ம். சிலப்பதிகாரத்தின் சாராம்சம் ஊழ்வினையே வலிவு மிக்கது என்பது.
எனவே என் நோக்கில் காரசாரம் என்பது காரத்தின் சாரத்தை, அதாவது அதிக அளவு காரத்தை (concentrated) குறிக்கும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.