Skip to content

சொல் பொருள்

காரம் – உறைப்புச் சுவை
சாரம் – மற்றைச் சுவை

சொல் பொருள் விளக்கம்

குழம்பு காரசாரமாக இருக்கிறது; காரசாரம் இல்லாமல் சப்பு என்று இருக்கிறது என்பவை வழக்குகள். ‘காரச்சேவு’ ‘காரவடை’ என்பவை தின்பண்டங்கள். மிளகு ‘காரமிளகு’ எனவும் படும்.

சாரம்-சார்ந்தது. காரத்தைச் சார்ந்த பிற சுவைகள். சாரம் என்பதற்கு இனிமைப் பொருள் உண்டாயினும், பிற சுவைகளைச் சுட்டலே சிறக்கும்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “காரசாரம்”

  1. ‘சாரம்’ என்ற சொல்லுக்கு ‘சார்ந்த’ என்று பொருள் கொள்வது இங்கு பொருத்தமானதாக இருக்காது என்பது என் கருத்து.

    ‘சாரம்’ எனும் சொல் ஒரு பொருளின் முக்கியக் குணத்தைக் குறிப்பதாக பலவமயம் கையாளக் கண்டிருக்கின்றோம்.

    உ-ம். சிலப்பதிகாரத்தின் சாராம்சம் ஊழ்வினையே வலிவு மிக்கது என்பது.

    எனவே என் நோக்கில் காரசாரம் என்பது காரத்தின் சாரத்தை, அதாவது அதிக அளவு காரத்தை (concentrated) குறிக்கும் என்பதே பொருத்தமானதாக இருக்கும் என நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *