சொல் பொருள்
கால்வாய் – குளத்திற்கு நீர்வரும் கால்.
வாய்க்கால் – குளத்தில் இருந்து நீர் செல்லும் கால்.
சொல் பொருள் விளக்கம்
‘வாய்’ என்பது குளம். கண்வாய் என்பது அதன் விரி; ‘கம்மாய்’ ‘கண்மாய்’ என இந்நாள் வழங்குகின்றது.
புலிக்கண், மான்கண், நாழிக்கண், துடுப்புக் கண் எனப்பல கண்களை அமைத்து அதன் வழியே நீரைப் போகவிடும் முறையால் ‘கண்வாய்’ எனப்பட்டதாம்.
நீர், வாய்க்கு அல்லது குளத்திற்கு வருவழி கால்வாய். வாயில் இருந்து நீர் வெளியேறுவழி வாய்க்கால். வாயும், காலும் கண்ணும், இடப் பொருளன.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்