Skip to content

காளியும் கூனியும்

சொல் பொருள்

காளி – கருநிறத்தவளாம் காளி
கூளி (கூனி) – காளியின் ஆணைப்படி நடக்கும் குள்ளப் பேய்

சொல் பொருள் விளக்கம்

தடித்துப் பருத்த ஒருத்தியும் சின்னஞ் சிறிய பிள்ளைகளும் ஆரவாரத்துடன் ஓடக் கண்டால், “என்ன, காளியும் கூளியுமாக இந்த ஓட்டம்?” என்பர்.

கூளி குள்ளம்: குட்டையானவனைக் குள்ளன் என்னும் வழக்கால் அறிக. உயரங்குறைந்த மகிழ்வுந்தைச் சிற்றூரார் ‘கூளிக்கார்’ என்பது உண்டு. காளிக்குக் கூளி கூறுவதும், கூளிக்குக் காளி கூறுவதும் பரணி நூல் செய்திகள். கர், கார், கால், காள், காழ் என்பவை கருவண்ணஞ் சார்ந்த வேர்கள்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *