சொல் பொருள்
காளி – கன்னங்கறேல் என்று இருப்பவள்.
மூளி – காதறுபட்டவள் அல்லது காதறை.
சொல் பொருள் விளக்கம்
தோற்றப் பொலிவு இல்லாதவர்களைக் ‘காளியும் மூளியும்’ என்பது வழக்கு. தற்பெருமையாலும், பிறர்மேல் கொண்ட வெறுப்பாலும் என்ன “ காளியும் மூளியுமாகக் கூடிக் கசிகிறதைப் பார்” என்பர்.
மூளி என்பது வாய் போன குடம், சட்டிகளைக் குறிப்பதும் உண்டு. ‘மூளி-அறுவாள்’ எனக் கூர் மழுங்கிய அறுவாளைக் குறிப்பதும் உண்டு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்