Skip to content

சொல் பொருள்

(பெ) சான்றோருக்குப் பாண்டியர் கொடுத்துவந்த ஒரு பட்டம்,

சொல் பொருள் விளக்கம்

எட்டி காவிதி என்பன தேய வழக்காகிய சிறப்புப்பெயர். (தொல். எழுத்து. 154. நச்.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

title bestowed on nobles by Pāṇdya kings;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்து
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும் – மது 496-499

நன்மை தீமைகளை(த் தம் அறிவால்) கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,
அன்புநெறியையும் அறச்செயலையும் (கடைப்பிடித்தல்)தவறாதபடி பாதுகாத்து,
பழியை வெறுத்தொதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுற்ற
தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றாரும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *