சொல் பொருள்
கிணறு – இறைத்துக் கொள்ளத்தக்க ஆழ்ந்த நீர் நிலை.
கேணி – அள்ளிக் கொள்ளத்தக்க ஊற்று நீர்நிலை.
சொல் பொருள் விளக்கம்
தோட்டத்தும் பிற நிலத்தும் கிணறு உண்டு. தோட்டம் துரவு என்பது இணைமொழி. துரவு ஆவது கிணறு. மிகப் பழங்காலத்தே உறைக் கிணறு இருந்தமை ‘உறைக் கிணற்றுப் புறச்சேரி’ எனவரும் பட்டினப் பாலையால் அறியலாம்.
கேணி ஊற்று நீரால் “தொட்டனைத் தூறும் மணற் கேணி” என்பதால் தெளிவாம். ஆற்றங்கரை ஊரார் ஊற்று நீர் எடுத்துப் பருகுதல் கருதி அதனை ‘ஊருண்கேணி’ என்பர். ஊருணி, ஊரணி, ஊருண்கேணி ஆய மூன்றும் வெவ்வேறானவை என்பதை அறிக.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்