Skip to content

1. சொல் பொருள்

(பெ) பறவை, 

2. சொல் பொருள் விளக்கம்

பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Parrot

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291
கிளி கடி மரபின ஊழ்_ஊழ் வாங்கி – குறி 44
கிளி மழலை மென் சாயலோர் – பட் 150
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 264
கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 329
கிளை மலி சிறுதினை கிளி கடிந்து அசைஇ – நற் 25/6
கொடும் குரல் குறைத்த செம் வாய் பைம் கிளி/அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/1,2
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும் – நற் 104/6
செம் வாய் பைம் கிளி கவர நீ மற்று – நற் 147/3
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/4
சிறு கிளி கடிகம் சென்றும் இ – நற் 288/9
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/5
வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் – நற் 304/3
சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/2
பவள செம் வாய் பைம் கிளி கவரும் – நற் 317/4
தினை கிளி கடியும் பெரும் கல் நாடன் – நற் 328/3
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி – நற் 368/1
சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் – நற் 389/6
கிளி குறைத்து உண்ட கூழை இருவி – குறு 133/2
வளை வாய் சிறு கிளி விளை தினை கடீஇயர் – குறு 141/1
புன கிளி கடியும் பூ கண் பேதை – குறு 142/2
படு கிளி கடிகம் சேறும் அடு போர் – குறு 198/5
தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் – குறு 217/1
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குறு 240/2
படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 291/2
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே – குறு 291/4
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும் – குறு 346/5
உண் கிளி கடியும் கொடிச்சி கை குளிரே – குறு 360/6
பைம் புற படு கிளி ஒப்பலர் – ஐங் 260/3
சோலை சிறு கிளி உன்னு நாட – ஐங் 282/3
பைம் புற சிறு கிளி கடியும் நாட – ஐங் 283/3
அளிய தாமே செ வாய் பைம் கிளி/குன்ற குறவர் கொய் தினை பைம் கால் – ஐங் 284/1,2
ஐவன சிறு கிளி கடியும் நாட – ஐங் 285/3
காய்த்த அவரை படு கிளி கடியும் – ஐங் 286/2
கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்து – ஐங் 289/1
பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி என – ஐங் 289/2
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி – ஐங் 375/2
இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி/இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று – ஐங் 375/2,3
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/6
இருவர் வான் கிளி ஏற்பில் மழலை – பரி 9/42
கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் – கலி 13/18
கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ – கலி 20/7
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் – கலி 50/9
ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போல – கலி 72/4
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என – அகம் 28/12
சிறுதினை படு கிளி கடீஇயர் பன் மாண் – அகம் 32/5
செம் தார் பைம் கிளி முன்கை ஏந்தி – அகம் 34/14
கிளி போல் காய கிளை துணர் வடித்து – அகம் 37/8
மட கிளி எடுத்தல் செல்லா தட குரல் – அகம் 38/12
கிளி கடி பாடலும் ஒழிந்தனள் – அகம் 118/13
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
செம் வாய் சிறு கிளி சிதைய வாங்கி – அகம் 192/5
கிளி கடி மகளிரின் விளி பட பயிரும் – அகம் 194/15
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என – அகம் 302/11
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி – அகம் 308/10
கிளி மரீஇய வியன் புனத்து – புறம் 138/9
கிளி கடியின்னே – புறம் 395/14
பெரும் குரல் கொள்ளா சிறு பசும் கிளிக்கே – நற் 194/10
கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே – நற் 209/6
சொல்ல தளரும் கிளியும் அன்று – கலி 55/14
கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் – அகம் 49/1
பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/9
பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே – ஐங் 288/4

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *