Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உச்சிக்கொண்டை, 2. கிரீடம், 3. மரத்தின் உச்சி, 4. உச்சி மயிர், 5. முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டியன்.

சொல் பொருள் விளக்கம்

உச்சிக்கொண்டை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bird’s crest, crown, top of a tree, tuft of hair, Name of a Pāṇdiya king, Mudthu-kudumbi-peru-vazhuthi

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குடுமி கோழி நெடு நகர் இயம்பும் – குறு 234/4

கொண்டையையுடைய சேவல் நெடிய நகரில் கூவிஅறிவிக்கும்

கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் – பெரும் 451

காவலமைந்த மதில்களை அழித்து (அவ்வரசரின்)கிரீடம்(முதலியவற்றை) கொள்ளும்

கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு – குறு 281/2

திரண்ட பனையின் உச்சியில் உள்ள வெள்ளிய குருத்தோலையோடு சேர்த்து வைத்த

புல் உளை குடுமி புதல்வன் பயந்து – அகம் 176/19

புன்மையான, குதிரையின் தலையாட்டத்தைப் போன்ற உச்சி மயிரையுடைய புதல்வனைப் பெற்று

தண்டா ஈகை தகை மாண் குடுமி – புறம் 6/26

தணியாத வள்ளல்தன்மை உள்ள தகுதி மாட்சிமைப்பட்ட குடுமிப்பெருவழுதியே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *