சொல் பொருள்
(பெ) கிழக்கு, 2. (வே.தொடர்) குணத்திற்கு,
சொல் பொருள் விளக்கம்
1. (பெ) கிழக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
East for the good character
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/3,4 திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது கிழக்கில் தோன்றும் வெள்ளியைப் போல இருள் நீங்கிட மலரும் மழுபொடு நின்ற மலி புனல் வையை விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் முழுவதும் மிச்சிலா உண்டு – பரி 24/80-83 சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில் சிறந்த அழகினையுடைய மகளிரும் மைந்தரும் ஆடுதலால் உமிழ்ந்தது போலானது இந்த நீர், குணத்தால் நிறைந்த சான்றோரே! முழுவதும் எச்சிலாகும்படி பருகி; குணக்கு – குணத்திற்கு. குணக்குச் சான்றீர் – குணத்தாலே சான்றீர் என்க – வேற்றுமை மயக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்