Skip to content

சொல் பொருள்

(பெ) கிழக்கு, 2. (வே.தொடர்) குணத்திற்கு, 

சொல் பொருள் விளக்கம்

1. (பெ) கிழக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

East for the good character

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் – நற் 230/3,4

திரட்சியான தண்டினையும் உடைய ஆம்பலின் தேன் மணக்கும் குளிர்ந்த விரிநிலை மலரானது
கிழக்கில் தோன்றும் வெள்ளியைப் போல இருள் நீங்கிட மலரும்

மழுபொடு நின்ற மலி புனல் வையை
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி
இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர்
முழுவதும் மிச்சிலா உண்டு – பரி 24/80-83

சேற்றோடு கலங்கிய மிக்க வெள்ளத்தையுடைய வையை ஆற்றில்
சிறந்த அழகினையுடைய மகளிரும் மைந்தரும் ஆடுதலால்
உமிழ்ந்தது போலானது இந்த நீர், குணத்தால் நிறைந்த சான்றோரே!
முழுவதும் எச்சிலாகும்படி பருகி;
குணக்கு – குணத்திற்கு. குணக்குச் சான்றீர் – குணத்தாலே சான்றீர் என்க – வேற்றுமை மயக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *