சொல் பொருள்
(பெ) 1. திரவங்களின் மேற்பரப்பில் தோன்றும் காற்று நிரம்பிய அரைக்கோளம், 2. சுழல்,
சொல் பொருள் விளக்கம்
திரவங்களின் மேற்பரப்பில் தோன்றும் காற்று நிரம்பிய அரைக்கோளம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bubble
whirlpool
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி உருக்குஉறு கொள்கலம் கடுப்ப விருப்புஉற தெண் நீர் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே – நற் 124/4-9 ஈங்கையின் மொட்டுக்களும் மலரான புன மல்லிகையும் உயரமான மணல் குன்றின்மேல் நவ்வி எனும் மானின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துகையினால், வெள்ளியை உருக்கும் கொள்கலத்தைப் போல் காண்பார் விரும்பும்படியாக தெளிந்த நீர்க்குமிழியிட்டு வடியும் தண்ணீரை நிறையப் பெற்றதாக நின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவத்தில் – தண்ணீர் தைந்த எக்கர் மேல் உதிர்ந்து கிடக்கும் பூக்களை மான் மிதிக்குங்கால் அதன் குளம்பு அழுந்தக் குழிந்த பூக்களிடையே தண்ணீர் கொப்புளித்து வருதலை, தெண்ணீர் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்றபொழுது என்றார்- ஔ.சு.து.விளக்கம். குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர் – மலை 213 நீர்க்குமிழிகள் சுழன்று வருகின்ற ஆழமான பொய்கையின் நீர் அரித்த கரையின்(மறுபக்கத்தில்) வனை கல திகிரியின் குமிழி சுழலும் துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் – மலை 474-476 குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும், வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும், காண்போர் விரும்பும், கண்ணுக்கு இனிய சேயாற்றின் – குயவன் மட்கலஞ் செய்யும் உருளையின் சுழற்சி விரைந்தோடும் நீரின்கட் சுழலுக்கு உவமை. – பொ.வே.வோ.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்