Skip to content

குறுக்கும் மறுக்கும்

சொல் பொருள்

குறுக்கு – குறுக்காகச் செல்வது குறுக்கு
மறுக்கு – குறுக்காகச் செல்வதற்கு எதிரிடையாக மறுத்துச் செல்வது மறுக்கு.

சொல் பொருள் விளக்கம்

இது ‘குறுக்கா மறுக்கா’ எனவும் வழங்கும். குறுக்காக மறுக்காக என்பவற்றின் தொகுத்தல் ஆகும். நெடிய உடலின் குறுக்காக அமைந்தது ‘குறுக்கு’ எனப்படுவதையும், ‘குறுக்கு வழி’ என்பதையும் நினைக. மறுத்தல், மறுக்கம், மறுமொழி இவற்றால் மறுக்கு எதிரிடையாதல் கொள்க. ‘குறுக்கும் மறுக்கும் ஓடுதல்’ ‘குறுக்கு மறுக்குமாக உழுதல்’ என்பவை வழக்கங்கள்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *