சொல் பொருள்
(பெ) சங்ககாலப் போர்களங்களுள் ஒன்று,
சொல் பொருள் விளக்கம்
குறுக்கை என்னும் ஊரில் சங்ககாலத்தில் போர் நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. போர்க்களத்தைதைச்
சங்கநூல்கள் பறந்தலை என்று குறிப்பிடுகின்றன. கோசர் குடி மன்னன் அன்னி என்பவனுக்கும் பொதியமலை நாட்டு மன்னன் திதியன் என்பவனுக்கும் இந்தக் குறுக்கைப் பறந்தலை என்னும் ஊரில் போர் நடந்தது. போரில் அன்னி கொல்லப்பட்டான். எவ்வி அறிவுரையைக் கேளாமல் போரிட்டு அன்னி மாண்டான். அவனது காவல்மரமான புன்னை போரின்போது வெட்டி வீழ்த்தப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of the battle fields of sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலரே அன்னி குறுக்கை பறந்தலை திதியன் தொல் நிலை முழு_முதல் துமிய பண்ணி புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் இன் இசை ஆர்ப்பினும் பெரிதே – அகம் 45/8-12 ஊர்மக்கள் பேச்சோ அன்னி என்பவன், குறுக்கை என்னும் போர்க்களத்தில், திதியன் என்பானின், நெடுங்காலம் நின்றிருக்கும் அடிமரத்தை வெட்டச் செய்து, அந்தப் புன்னை மரத்தை மொட்டையாக்கிய போது, கூத்தர்கள் (எழுப்பிய) இன்னிசையின் ஆரவாரத்தினும் பெரிதே பார்க்க : அன்னி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்