Skip to content

சொல் பொருள்

1. (வி) குளிர்ச்சியடை

2. (பெ) 1. குளிர்ச்சி, 2. அரிவாள், 3. தினைப்புனத்தில் கிளியை ஓட்டும் கருவி

சொல் பொருள் விளக்கம்

குளிர்ச்சியடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be cool, coldness, chilliness, sickle, contrivance to scare away parrots on corn field

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி – அகம் 214/3

பெரிய களிற்றின் பிடியுடன் கூடிய தொகுதி குளிர்ந்திட மழை பெய்து

ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய
கூதிர் உருவின் கூற்றம் – குறு 197/3,4

வாடைக் காற்றின் குளிரோடு மனம் குழம்பி மயங்கிய
குளிர்காலம் என்னும் உருவில் உள்ள கூற்றுவன்

குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 110

அரிவாள் போன்ற வளைந்த காய்களைக் கொண்டன அவரை

குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ – நற் 204/2

கிளிகடிகருவியால் காக்கப்படும் அகன்ற தினைப்புனத்திற்கு ஞாயிறு தோன்றும் காலையில் வரவா?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *