Skip to content

சொல் பொருள்

மதுரை நகரம், முகத்துவாரம், நதிகள் ஒன்றோடொன்று கூடும் இடம், கைகூடிவருதல், ஆகிவருதல், கூடல்விழா

சொல் பொருள் விளக்கம்

மதுரை நகரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

The city of Madurai, mouth of a river, estuary, Confluence of rivers, materialise, come to fruition, festival of koodal

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல்
நாள்_அங்காடி நனம் தலை கம்பலை – மது 429,430

மாடத்தால் விளக்கமுற்ற மிக்க புகழையுடைய மதுரையில்
நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் (எழுந்த)பெரிய ஆரவாரமும்

மலி ஓதத்து ஒலி கூடல்
தீது நீங்க கடல் ஆடியும் – பட் 98,99

மிகுந்த அலைஆரவாரம் ஒலிக்கும் புகார்முகத்தில்,
தீவினை போகக் கடலாடியும்

செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு
மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/5-7

நேர் கிழக்காக ஓடும் கலங்கலான நிறைந்த வெள்ளத்தையுடைய,
காவிரியோடு கூட, பூக்கள் பரந்த வெள்ளத்தையுடைய ஆறுகள்
மூன்றும் ஒன்று கூடும் முக்கூடல் போன்றவன் நீ!
– மூன்றுடன் கூடிய கூடலைப் பழைய உரைகாரர் “அக் காவிரி தானும், ஆன் பொருநையும், குடவனாறும் என
இம் மூன்றும்சேரக்கூடிய கூட்டம்” என்பர்.- ஔ.சு.து.விளக்கம்

ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர் பரிசிலர் – புறம் 38/16,17

அவ்விண்ணுலகத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கைகூடுவதால்
நின் நாட்டை நினைப்பர் பரிசிலர்.

கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/11,12

அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட,
நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ?
– மா.இராச.உரை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *