Skip to content
கூவிளம்

கூவிளம் என்பதுவில்வம்

1. சொல் பொருள்

வில்வம், ‘நேர்நிரை’ அசை கொண்ட சீரமைதி

2. சொல் பொருள் விளக்கம்

வில்வம், இளகம், வில்வை, குசாபி. கடையெழு வள்ளல்களில் ஒருவனான எழினியின் குடிப்பூ கூவிளம். சைவ சமய மரபுகளில் வில்வ மரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. வில்வ வேர் சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும் மூலங்களுள் ஒன்றாகும்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

bael, Aegle marmelos

கூவிளம்
கூவிளம்

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கூவிளம் கண்ணி கொடும் பூண் எழினியும் – புறம் 158/9

கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் - புறம் 372/6

உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம்/எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் - குறி 65,66
கூவிளம்
கூவிளம்
செய் பூம் கொன்றை கூவிள மாலை சென்னியுள் சேர் புனல் சேர்த்தி - தேவா-சம்:450/1

கூறும் ஒன்று அருளி கொன்றை அம் தாரும் குளிர் இள மதியமும் கூவிள மலரும் - தேவா-சம்:837/2

கடி கொள் கொன்றை கூவிள மாலை காதல் செய் - தேவா-சம்:1070/3

கோடல் கோங்கம் குளிர் கூவிள மாலை குலாய சீர் - தேவா-சம்:1524/1

ஒளிரும் பிறையும் உறு கூவிள இன் - தேவா-சம்:1650/1

கோடல் கூவிள மாலை மத்தமும் செம் சடை குலாவி - தேவா-சம்:2497/2

மணம் கமழ் கொன்றை வாள் அரா மதியம் வன்னி வண் கூவிள மாலை - தேவா-சம்:4093/3

தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் - தேவா-அப்:1025/1

வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை - தேவா-அப்:2107/1

கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும் - தேவா-அப்:2253/1

செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு - தேவா-சுந்:602/1

கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர் - தேவா-சுந்:775/2

கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி - தேவா-சுந்:776/1

கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு எருக்கு அணி சடையர் - தேவா-சம்:438/1

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க - தேவா-சம்:812/1

கோங்கொடு செருந்தி கூவிளம் மத்தம் கொன்றையும் குலாவிய செம் சடை செல்வர் - தேவா-சம்:816/3

குளம்பு உற கலை துள மலைகளும் சிலம்ப கொழும் கொடி எழுந்து எங்கும் கூவிளம் கொள்ள - தேவா-சம்:823/3

கூவிளம் கையது பேரி சடைமுடி கூட்டத்தது - தேவா-சம்:1261/1

வன்னி கொன்றை மத மத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார் - தேவா-சம்:1536/1,2

நொச்சியே வன்னி கொன்றை மதி கூவிளம்
உச்சியே புனைதல் வேடம் விடைஊர்தியான் - தேவா-சம்:1591/1,2

கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன் - தேவா-சம்:1734/1

நாறு கூவிளம் நாகு இள வெண் மதியத்தோடு - தேவா-சம்:1875/1

கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடை மேல் உடையாரும் - தேவா-சம்:2216/1

கடி கொள் கூவிளம் மத்தம் கமழ் சடை நெடு முடிக்கு அணிவர் - தேவா-சம்:2435/1

நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன் - தேவா-சம்:2512/1

அடுத்தடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்
தொடுத்து உடன் சடை பெய்தாய் துருத்தியாய் ஓர் காலனை - தேவா-சம்:2529/1,2

கங்கை திங்கள் வன்னி துன் எருக்கின்னொடு கூவிளம்
வெம் கண் நாகம் விரி சடையில் வைத்த விகிர்தன் இடம் - தேவா-சம்:2750/1,2

வன்னி கொன்றை மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை - தேவா-சம்:3287/1,2

நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் - தேவா-அப்:1177/1

கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும் - தேவா-அப்:1207/1

குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும் - தேவா-அப்:1360/1

கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும் - தேவா-அப்:1625/1

கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று - தேவா-அப்:3064/3

தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும் - தேவா-சுந்:452/1

கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை - தேவா-சுந்:984/1,2

தண் நறு மத்தமும் கூவிளமும் வெண் தலைமாலையும் தாங்கி ஆர்க்கும் - தேவா-சம்:67/1

நீரோடு கூவிளமும் நிலா மதியும் வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றை - தேவா-சம்:1398/1

கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும்
மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் - தேவா-அப்:857/1,2

கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும் - தேவா-அப்:2273/3

கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார் - தேவா-அப்:3028/3

குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும்
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர் - தேவா-சுந்:1002/1,2

கொன்றை மதியமும் கூவிளம் மத்தமும் - திருவா:17 10/1

கானது கூவிள மாலை கமழ் சடை - திருமந்:2999/3

கன்னிகாரம் குரவம் கமழ் புன்னை கற்பு பாடலம் கூவிளம் ஓங்கி - 1.திருமலை:5 94/2

கோடல் கோங்கம் குளிர் கூவிளம் என்னும் திருப்பதிக குலவு மாலை - 6.வம்பறா:1 303/1

மன்னு திருப்பதிகள்-தொறும் வன்னியொடு கூவிளமும்
சென்னி மிசை வைத்து உவந்தார் கோயிலின் முன் சென்று இறைஞ்சி - 6.வம்பறா:2 292/1,2

முளைக்கும் சீத நிலாவொடு அரா விரி திரை கங்கா நதி தாதகி கூவிள
முடிக்கும் சேகரர் பேர் அருளால் வரு முருகோனே - திருப்:29/11,12

வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து வால சோமன் அஞ்சு பொங்கு பகு வாய - திருப்:734/6

பார மாசுணங்கள் சிந்துவார ஆரம் என்பு அடம்பு பானல் கூவிளம் கரந்தை அறுகோடே - திருப்:735/6

குரவு கூவிளம் அரும்பு இதழி தாதகி நெடும் குடில வேணியில் அணிந்தவர் ஆகம் - திருப்:1107/7

துத்தி நச்சு அரா விளம் பிச்சி நொச்சி கூவிளம் சுக்கிலக்கலா அமிர்த பிறை சூதம் - திருப்:1252/1

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *