Skip to content

சொல் பொருள்

ஒரு செடி – அதன் இலை, கிழங்கு, கூட்டம்

சொல் பொருள் விளக்கம்

ஒரு செடி – அதன் இலை, கிழங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

East Indian arrowroot, Curcuma angustifolia

Crowd, horde, gathering

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கூவை துற்ற நால் கால் பந்தர் – புறம் 29/19

கூவை இலையால் வேயப்பட்ட நாங்கு காலையுடைய பந்தராகிய

கோழ் ஊஉன் குறை கொழு வல்சி
புலவு வில் பொலி கூவை – மது 141,142

கொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,
புலால் (நாறும்)வில்லையும், பொலிவுடைய கூவைக்கிழங்கையும்,

நூறொடு குழீஇயின கூவை – மலை 137

சுண்ணாம்பின் தன்மையில் (முற்றித்)திரண்டன, கூவைக்கிழங்கு

கொடு வில் கூளியர் கூவை காணின் – மலை 422

கொடிய வில்லினையும் உடைய (காட்டுப்படையான)விற்படையினரின் கூட்டத்தைக் கண்டால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *