சொல் பொருள்
செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு/ஓய்ந்திருத்தல்,
சொல் பொருள் விளக்கம்
செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு/ஓய்ந்திருத்தல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stop from work and take rest
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பரிசில் பரிசிலர்க்கு ஈய உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11 பரிசில் பொருளைப்பரிசிலர்க்கு வழங்குதலில் வலி பொருந்திய வேலையுடைய காளையாகிய அவனும் ஓய்ந்திருக்கமாட்டான். நன் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10 நல்ல வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும் வேலையில் ஓய்வு இல்லாததினால் என் கண்ணில் அவன் படவில்லை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்