Skip to content

சொல் பொருள்

செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு/ஓய்ந்திருத்தல்,

சொல் பொருள் விளக்கம்

செயலிலிருந்து விடுபட்டு ஓய்ந்திரு/ஓய்ந்திருத்தல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

stop from work and take rest

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பரிசில் பரிசிலர்க்கு ஈய
உரவு வேல் காளையும் கைதூவானே – புறம் 334/11

பரிசில் பொருளைப்பரிசிலர்க்கு வழங்குதலில்
வலி பொருந்திய வேலையுடைய காளையாகிய அவனும் ஓய்ந்திருக்கமாட்டான்.

நன் மனை நனி விருந்து அயரும்
கைதூவு இன்மையின் எய்தா மாறே – நற் 280/10

நல்ல வீட்டில் மிகுந்துவரும் விருந்தினரை உபசரிக்கும்
வேலையில் ஓய்வு இல்லாததினால் என் கண்ணில் அவன் படவில்லை.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *