Skip to content

சொல் பொருள்

ஊட்டு, அலங்கரி, மனித உறுப்பு, யானையின் துதிக்கை, கைப்பிடி, உலக நடப்பு, ஒழுங்கு, வரிசை

ஈறு, குறுமைப் பொருள்தரல்

கை – ஐந்து

சொல் பொருள் விளக்கம்

கன்னி -> கன்னிகை

கை என்பது கையென்னும் உறுப்பையோ, ஒழுக்கத்தையோ, கைப்புச் சுவையையோ குறிப்பதை அன்றி ஐந்து என்னும் பொருளில் வழங்குவதும் உண்டு. ஒரு கைவிரல்கள் ஐந்து தானே! கைவிரலைக் கொண்டே மாந்தன் எண்ணிப் பழகினான். அதனை எண்ணிக்கை என்றும் சொன்னான். ஒரு கைவிரல் ஐந்து. இருகை விரலும் சேர பத்து. அதனாலே எண்கள் பதின் மடங்காக வழங்குகின்றன. இனிக்கால் விரலையும் கூட்டி எண்ண இருபது விரல்கள் ஆகின்ற வகையில் இருபதுவரை எண்ணுதலும் உண்டாயிற்று. ஆங்கில எண்களை அறிக. ஒரு கை இலை என்றால் ஐந்திலை என்பது பொருள். அடுக்கு, பூட்டு என்பதும் ஐந்தே. அவற்றைக் காண்க.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

feed with the hand, adorn, decorate, hand, trunk of an elephant, handle, custom, usage, way of the world, row, line

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப – முல் 35,36

வைத்த முள்ளையுடைய பரிக்கோலால் குத்தி, (யானைப் பேச்சான)வடசொற்களைப் பலகாலும் சொல்லி, 35
(வேறொரு தொழிலைக்)கல்லாத இளைஞர் கவளத்தை ஊட்டிவிட

மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப – மது 418-420
மயிலின் தன்மையையுடையோரும்; மடப்பத்தையுடைய மொழியினையுடையோரும்;(ஆகிய மகளிர்)
(தம்மை)அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்
கல்லாத இளைஞருடன் சிரிப்பவராய் உண்டு துய்க்க,}

செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் – சிறு 167
செழுமையான குலையினையுடைய காந்தள் கைவிரல் (போலப்)பூக்கவும்

தாழ் பெரும் தட கை உயர்த்த யானை – திரு 158
(நிலம் வரை)தாழ்ந்த பெரிய வளைவினையுடைய கையினையும் உடைய புகழ்பெற்ற யானையின்

நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து – புறம் 36/7
நெடிய கைப்பிடியையுடைய கோடலி வெட்டுதலால் நின்ற நிலை கலங்கி

அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று
அறிகல்லாய் போறி காண் நீ – கலி 95/25,26
“அம்மாடியோ! உண்மையைப் பொய்யென்று வஞ்சிக்கும் உலக நடப்பை நீ ஒன்றும்
அறியமாட்டாய் போலும்! நீயே உணர்ந்து பார்!”

கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49
ஒழுங்காய் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *