Skip to content

1. சொல் பொருள்

(பெ) குளக்கொக்கு, நுள்ளை மடையான், குருட்டுக்கொக்கு, வெள்ளைக்கொக்கு, குடுமிக்கொக்கு, கூரல் கொக்கு, பார்வல் கொக்கு, காணாக் கொக்கு, கயக்கணக் கொக்கு, ஒரு பறவை, மாமரம்

2. சொல் பொருள் விளக்கம்

பழுப்பு நிறம் மிகுந்து காணப்படும். வாலும் முன் கழுத்தும் முன் சிறகும் வெண்மையாகக் காணப்படும். கொக்கின் நகங்கள் நீண்டு, மெல்லிய தாய் , ( long and thin claws ) காணப்படுமென்பார்.

இதன் கால்கள் பச்சை நிறமாக இருக்குமென்று ( legs and feet dull green ) அறிஞர் கூறுவர்.

நெல் வயல்களில் நீர் மடைகளில் கண்டதையே சங்கப் புலவர் பாடியுள்ளார் . இவ்வாறு நீர் மடைகளில் இந்தக் கொக்கு காணப்படுவதால் இதை மடையான் என்றழைக்கின்றனர்.

ஆரல் மீன் இட்ட முட்டைகளையும் இறால் மீனின் குஞ்சையும் தின்னும்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

crane, mango tree

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் – நற் 280/1,2

மாமரத்திலிருந்து உதிர்ந்து கீழே விழுந்த இனிய மாம்பழம், பறவையாகிய கொக்கின்
கூம்பிய நிலை போன்ற மொட்டுக்களையுடைய ஆம்பல் உள்ள

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *