Skip to content
கொகுடி

கொகுடி என்பது அடுக்குமல்லி

1. சொல் பொருள்

ஒரு வகை மல்லிகை, அடுக்கு மல்லிகை, நட்சத்திர மல்லிகை, மல்லிகை அல்லாத வேறு ஒரு வகை

2. சொல் பொருள் விளக்கம்

நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a variety of jasmine creeper, Jasmine Sambac, star jasmine, Jasminum Pubescens, Arabian jasmine, Jasminum Arborescens Roxb.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கொகுடி
கொகுடி
ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி /சேடல் செம்மல் சிறுசெங்குரலி - குறி 81,82

நறுமணம் மிக்க குளிர்ச்சி மிக்க பூ

கொகுடி
கொகுடி
குற்றம் அறியாத பெருமான் கொகுடி கோயில் - தேவா-சம்:1806/3

கொம்பு ஆர் குரவு கொகுடி முல்லை குவிந்து எங்கும் - தேவா-சம்:2162/3

கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை - தேவா-சம்:3778/1

கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில் - தேவா-அப்:2801/2,3

கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:299/3,4

கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:300/3,4

கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில்
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:301/3,4

குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:302/3,4

கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில்
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:303/3,4

கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில்
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:304/3,4

கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:305/3,4

குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:306/3,4

கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில்
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:307/3,4

குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில்
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே - தேவா-சுந்:308/3,4

குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில்
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி - தேவா-சுந்:309/2,3

கூற்று உதைத்தார் திரு கொகுடி கோயில் நண்ணி கோபுரத்தை தொழுது புகுந்து அன்பர் சூழ - 6.வம்பறா:2 117/1

நறும் பாதிரியும் நாள் மலர் கொகுடியும்
இறும்பு அமல் ஏலமும் ஏர் இலவங்கமும் - இலாவாண:12/20,21

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “கொகுடி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *