Skip to content

சொல் பொருள்

உயர்ந்தது, அச்சம், பெரியது, வீண், விடியற்காலம்

சொல் பொருள் விளக்கம்

உயர்ந்தது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is great, fear, that which is vast, futility, dawn

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207

மேலான ஒன்றைக் கூறுவேன், கொல்லும் போர்த்தொழில் வல்ல தலைவனே

கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போல
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/6-8

கடுமையும் மிடுக்கும் உள்ள யானைகளையும், நீண்ட தேரினையும் உடைய அதிகமானின்
அச்சமுண்டாக்கும் போர்க்களத்தின்கண் இரவைக்கழிக்கும் ஊரினர் போன்று
சிலவே ஆகுக நீ துயிலும் நாட்கள்.

கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே – குறு 138/1

பெரிய ஊரிலுள்ளார் தூங்கினாலும் நாம் தூங்கமாட்டோம்;

புன்னை அம் சேரி இ ஊர்
கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே – குறு 320/7,8

புன்னை மரங்கள் சூழ்ந்த அழகிய சேரிகளையுடைய இந்த ஊரில் உள்ளோர்
வீணே பழி தூற்றுவர், தம் கொடுமையான தன்மையினால்.

கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற – புறம் 379/11

விடியற்காலத்தே வந்து பாடும் வழக்கத்தையுடைய உன் கிணைப்பொருநன் வந்து எனக்குச் சொல்ல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *