சொல் பொருள்
விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது, கொம்பர், மரக்கிளை,
சொல் பொருள் விளக்கம்
விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
horn
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மடவ மன்ற தடவு நிலை கொன்றை ————— கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/1-4 அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்! கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/1,2 நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல் செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்