Skip to content

சொல் பொருள்

விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது, கொம்பர், மரக்கிளை,

சொல் பொருள் விளக்கம்

விலங்குகளின் தலையில் நீட்டிக்கொண்டிருப்பது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

horn

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மடவ மன்ற தடவு நிலை கொன்றை
—————
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/1-4

அறியாமையுடையன, நிச்சயமாக! இந்த அகலமாய் நிற்கும் கொன்றை மரங்கள்!
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன

மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை
பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி – குறு 256/1,2

நீல மணியின் கதிர்களை வரிசையாய் வைத்தாற்போன்ற கரிய கொடிகள் படர்ந்த அறுகம்புல்
செறிவாகப் பின்னிக்கிடந்ததை, மெல்லிய கொம்புகள் உள்ள தன் பெண்மானோடு உண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *