சொல் பொருள்
பொழி, (செழிப்பு)பெருகு, ஒதுக்கு
சொல் பொருள் விளக்கம்
சுளகு அல்லது முறத்தில் பொருள்களை இட்டு, அதைப் பக்கவாட்டில் அசைத்து அசைத்து
பொருளில் உள்ள தூசி,கல் ஆகியவற்றை ஒதுக்குதல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pour down as showers, be in abundance, waft ashore as fine sand by waves, sift, winnow
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் வரை கொழி நீர் கடுப்ப அரவின் அம் வரி உரிவை அணவரும் மருங்கின் – அகம் 327/12,13 செங்குத்தான மலையிலிருந்து செழுமையாக விழும் அருவிநீரைப் போன்று பாம்பின் அழகிய வரிகளையுடைய உரிக்கப்பெற்ற தோல்கள் பொருந்தும் பாறையிடங்களும் புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனி – பட் 7,8 நீர் பரந்து பொன்(போல் விளைச்சல்) செழித்துப்பெருகும் விளைதல் தொழில் அற்றுப்போகாத அகன்ற வயல்களில் இயங்கு புனல் கொழித்த வெண் தலை குவவு மணல் – மது 336 ஓடுகின்ற நீர் ஒதுக்கித்தள்ளிய வெள்ளிய மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய விசையம் கொழித்த பூழி அன்ன உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை – மலை 444,445 சர்க்கரையை(ச் சுளகில்) கொழித்து (குருமணல் போன்ற பகுதியை நீக்கி ஒதுக்கிய)பொடியைப் போல, (திகட்டலால்)உண்பாரைத் தடுக்கும் நுண்ணிதாக இடிக்கப்பட்ட தினைமாவையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்