Skip to content
கோடி

கோடி என்பதன் பொருள்நூறு இலட்சம், புதிய ஆடை, ஓர் எண்,தனுஷ்கோடி

சொல் பொருள் விளக்கம்

தனுஷ்கோடி, திரு அணைக்கரை, புதிய ஆடை, ஓர் எண், நூறு இலட்சம், ஒரு பெரிய தொகை, எண்ணின் மிகுதி

ஒரு எண்(1000000)

வேர்ச்சொல்லியல்

இது crore என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது கோட்டி என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dhanushkodi, sethu, new cloth, ten million, large number

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வென் வேல் கவுரியர் தொன் முது கோடி
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல் போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல் வீழ் ஆலம் போல – அகம் 70/13-16

வெற்றி வேலினையுடைய பாண்டியரது மிக்க பழமையுடைய திருவணைக்கரையின் அருகில்
முழங்கும் இயல்பினதான பெரிய கடலின் ஒலிக்கின்ற துறைமுற்றத்தில்
வெல்லும் போரினில் வல்ல இராமன் அரிய மறையினை ஆய்தற்பொருட்டாகப் புள்களின் ஒலி இல்லையாகச்
செய்த
பல விழுதுகளைக் கொண்ட ஆலமரம் போல

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ- அகம் 86/21,22

முதுகினை வளைத்து புத்தம்புதிய புடவைக்குள்
ஒடுங்கிக்கிடந்த இடத்தினைச் சார்ந்து

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – புறம் 18/5

ஒன்றைப் பத்துமுறையாக அடுக்கப்பட்டதாகிய கோடி என்னும் எண்ணிகைக் கடை எண்ணாக இருத்திய
– ஔ.சு.து.உரை

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடு பெரிது நந்தும் – புறம் 184/5,6

அறிவுடைய அரசன் இறைகொள்ளும் நெறியை அறிந்து கொள்ளின்
கோடிப் பொருளினை ஈட்டிக்கொடுத்துத் தானும் மிகவும் தழைக்கும்.

கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய – புறம் 202/7

பல கோடியாக அடுக்கப்பட்ட பொன்னை நுங்களுக்கு உதவிய

கோடை ஆயினும் கோடி
காவிரி புரக்கும் நன் நாட்டு பொருந - புறம் 393/22,23

கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி
கடு வினையர் ஆகியார் சார்ந்து - நாலடி:13 4/3,4

கலவாமை கோடி உறும் - நாலடி:17 8/4

கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை - நான்மணி:25/3

கொல்லாமை முன் இனிது கோல் கோடி மாராயன் - இனிய40:5/1

கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும் - திரி:66/3

கோடி கடையுள் விரியார் கடைத்தலை - ஆசாரக்:44/2

பொருள் கோடி எய்தல் புகன்று - சிறுபஞ்:104/4

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது - குறள் 38/13,14

கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
சூழாது செய்யும் அரசு - குறள் 56/7,8

முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி - குறள் 56/17

முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் - குறள் 56/17,18

எழுபது கோடி உறும் - குறள் 64/18

ஏது இன்மை கோடி உறும் - குறள் 82/12

பத்து அடுத்த கோடி உறும் - குறள் 82/14

அடுக்கிய கோடி பெறினும் குடி பிறந்தார் - குறள் 96/7

கோடி உண்டாயினும் இல் - குறள் 101/10

இரவாமை கோடி உறும் - குறள் 107/2

கோடி விளரி மேல்_செம்பாலை என - சிலப்.புகார் 3/88

குழல் மேல் கோடி வல முறை மெலிய - சிலப்.புகார் 3/92

உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் - சிலப்.புகார் 5/136

கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை - சிலப்.புகார் 6/121

மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு - சிலப்.மது 11/45

கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல - சிலப்.மது 11/60,61

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் - சிலப்.மது 14/182,183

கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் - சிலப்.மது 20/18

கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி - சிலப்.மது 21/32

தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈந்து - மணி 28/128,129

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு மூலச்சொல்

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *