சொல் பொருள்
ஒரு சேர மன்னன்
சொல் பொருள் விளக்கம்
சேரமான் கோக்கோதை மார்பன் என்பவன் சங்ககாலச் சேர மன்னர்களில் ஒருவன். பொய்கையார்
என்னும் சங்ககாலப் புலவர் இவனைப் பாடியுள்ளார் (புறம் 48,49) இவனது ஊர் தொண்டி. எனவே,
இவனைத் தொண்டி அரசன் என ஒருபாடலில் குறிப்பிடுகிறார்
கோதைமார்பன் என்று பெருஞ்சேரல் இரும்பொறை போற்றப்படுவதை இங்கு ஒப்புநோக்கிக்கொள்ள வேண்டும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chera king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழை அணி யானை பழையன்மாறன் மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் கடும் பரி புரவியொடு களிறு பல வவ்வி ஏதில் மன்னர் ஊர் கொள கோதைமார்பன் உவகையின் பெரிதே – அகம் 346/19-25 இழையை அணிந்த யானையினையுடைய பழையன் மாறன் என்பானை மாடங்கள் மிக்க தெருக்களையுடைய கூடலாகிய அங்கே மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர்செய வந்து தங்கியிருந்த கிள்ளிவளவன் நல்ல போரின்கண் சாய்த்து கடிய செலவினையுடைய குதிரைகளுடன் பல யானைகளையும் பற்றிக்கொண்டு பகை மன்னரது ஊரினைப் பற்றிக்கொள்ள கோதைமார்பன் என்னும் சேரன் எய்திய மகிழ்வினும் பெரிதாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்