Skip to content

சொல் பொருள்

பூச்சரம், மாலை, கொண்டை மாலை

சேர மன்னர்களின் பட்டப்பெயர்

சொல் பொருள் விளக்கம்

பூச்சரம், மாலை, சேர மன்னர்களின் பட்டப்பெயர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

garland of flowers

A title of the Chera kings

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கூந்தல் மகளிர் கோதை புனையார் – நெடு 53

(தம்)தலைமயிரில் மகளிர் (குளிர்ச்சி மிகுதியால்)மாலை அணியாதவராய்,

தண் கடல் நாடன் ஒண் பூ கோதை
பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ – மது 524,525

குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனந்தாரையுடைய சேரனுடைய
பெரிய நாளோலக்க இருப்பில் சீரியோர் திரண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *