Skip to content
சக்கரம்

சக்கரம் என்பதன் பொருள்வட்டவடிம்

1. சொல் பொருள்

வட்டமாகச் செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் என வழங்கப்படுதல் முஞ்சிறை வட்டார வழக்காகும்

2. சொல் பொருள் விளக்கம்

சக்கரம் வண்டிகளுக்கு உரியது. சக்கரமாகிய வட்ட வடிவில் ஆக்கிய சக்கரம் என்னும் பணம் சேரலத்தில் வழங்கியது. வட்டமாகச் செய்யப்பட்ட வெல்லம் சக்கரம் என வழங்கப்படுதல் முஞ்சிறை வட்டார வழக்காகும். சக்கரை (சருக்கரை) பொது வழக்கு.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

circle

4. வேர்ச்சொல்லியல்

இது circle என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது சக்கரம் என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

5. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் - நான்மணி:0/2

சங்கமும் சக்கரமும் தாமரை கை ஏந்தி - சிலப்.மது 12/107

பொன் அணி நேமி வலம் கொள் சக்கர கை - மணி 13/57

தரும சக்கரம் உருட்டினன் வருவோன் - மணி 10/26

சால்பு உடை உயர்வின் சக்கரம் நடத்தும் தன்மையின் தலைவர் ஒத்து உளதே - கம்.பால:3 10/4

சினத்து அயில் கொலை வாள் சிலை மழு தண்டு சக்கரம் தோமரம் உலக்கை - கம்.பால:3 11/1

சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அ - கம்.பால:13 5/1

சங்கினொடு சக்கரம் உடை தனி முதல் பேர் - கம்.பால:22 32/2

சூலம் வாள் மழு தோமரம் சக்கரம்
கால பாசம் கதை பொரும் கையினார் - கம்.ஆரண்:7 11/1,2

சக்கரம் நடத்தும் எனையோ தயரதன் தன் - கம்.ஆரண்:11 28/3

சக்கரம் உலக்கை தண்டு தாரை வாள் பரிசம் சங்கு - கம்.சுந்:7 8/1

உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள் - கம்.சுந்:7 33/3

சக்கரம் தோமரம் உலக்கை தண்டு அயில் வாள் - கம்.சுந்:8 39/1

சக்கரம் உண்டோ கையில் தனு உண்டோ வாளி உண்டோ - கம்.யுத்1:13 15/2

சூலம் வாள் அயில் தோமரம் சக்கரம்
வாலம் வாளி மழையின் வழங்கியே - கம்.யுத்2:15 57/1,2

தண்டு வாள் அயில் சக்கரம் சாயகம் - கம்.யுத்2:15 59/1

தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு - கம்.யுத்2:16 100/1

தலையொடும் போம் விசைத்து எறிந்த சக்கரம் - கம்.யுத்3:20 39/4

எழு மழு சக்கரம் ஈட்டி தோமரம் - கம்.யுத்3:22 46/1

சால வான் தண்டு தரித்திடின் சக்கரம் தாங்கின் - கம்.யுத்3:31 11/3

தொல் ஆர் மிடல் வளை சக்கரம் சூலம் இவை தொடக்கத்து - கம்.யுத்4:37 54/3

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு மூலச்சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *