சொல் பொருள்
(பெ) சிவபெருமானின் கற்றைத் தலை மயிர், சிவனடியார்கள் வளர்த்துக்கொள்ளும் தலை மயிர்,
சொல் பொருள் விளக்கம்
சிவபெருமானின் கற்றைத் தலை மயிர், சிவனடியார்கள் வளர்த்துக்கொள்ளும் தலை மயிர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Entangled locks of hair- as once worn by Siva as an ascetic, and
now by his devotees in imitation of him
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10 நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2 தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி, அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை – பட் 54,55 மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய) (நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்