Skip to content

சொல் பொருள்

(பெ) சிவபெருமானின் கற்றைத் தலை மயிர், சிவனடியார்கள் வளர்த்துக்கொள்ளும் தலை மயிர்,

சொல் பொருள் விளக்கம்

சிவபெருமானின் கற்றைத் தலை மயிர், சிவனடியார்கள் வளர்த்துக்கொள்ளும் தலை மயிர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Entangled locks of hair- as once worn by Siva as an ascetic, and
now by his devotees in imitation of him

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை – அகம் 0/10

நெருப்பு அகைந்து எரிவதைப் போன்ற மின்னிப் பிரகாசிக்கும் முறுக்கிய சடைமுடி

தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து – கலி 1/2

தெளிந்த நீரைக்கொண்ட கங்கையைத் தன் சடையில் அடக்கிக்கொண்டு, முப்புரங்களையும் தீயூட்டி,

அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும் புகை – பட் 54,55

மினுமினுக்கும் சடையையுடைய துறவிகள் தீயில் யாகம்செய்யும்(போது எழும்பிய)
(நெய் முதலியவற்றின்)மணமுள்ள புகை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *