Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பல வழிகள் கூடுமிடம், 2. சந்தன மரம், 3. மயிர்ச்சாந்து

சந்து – பொருத்து.

சந்து – சந்தை

சொல் பொருள் விளக்கம்

1. பல வழிகள் கூடுமிடம்

பொருத்து – தொடைப் பொருத்து (இடுப்பு) இரு பகைவர் பொருந்துதல். “இருவருக்குஞ் சந்து சொல்ல” (சிலப். 8. 101. அடியார்.)

சந்தை – பல கடைகள் கூடும் இடம். (வடமொழி வரலாறு. 70-71.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Crossing of many roads, sandalwood tree, Perfumed unguent for the hair

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர்
சந்து நீவி புல் முடிந்து இடு-மின் – மலை 392,393

(அந்த வழிகள்)முன்பு(எப்படி இருந்தன என்று) நன்றாக அறியாத, நாடு மாறி வரும் புதியவராகிய நீங்கள்
பல வழிகளும் கூடின அந்த சந்திகளைத் தொட்டுத்தடவிப் பார்த்து, அறிகுறியாகப் புற்களை முடிந்து வைப்பீர் 

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை – அகம் 59/12

நல்லந்துவனார் பாடிய சந்தன மரங்கள் நிறைந்த உயர்ந்த மலை

உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு – அகம் 102/3

பூசிய மயிர்ச் சாந்தினையுடைய பரந்த கரிய கூந்தல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *