சொல் பொருள்
(பெ) 1. போர், 2. ஏற்றத்தாழ்வின்மை
சொல் பொருள் விளக்கம்
1. போர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
battle, evenness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறுநர் தேய்த்து செல் சமம் முருக்கி – திரு 99 கோபமுடையோரை நசுக்கி, மேற்செல்லுகின்ற போரில் கொன்றழித்து யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் – பரி 19/42 யாழின்கண் இளிவாய்ப்பாலை, குரல்வாய்ப்பாலை ஆகியவற்றை வலியவும் மெலியவுமாகத் தாக்காது சமனாகத் தாக்கி அதன் இன்பத்தைக் கொள்வோரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்