சொல் பொருள்
(பெ) 1. பகைமை, 2. நீர், 3. சினம்,
சொல் பொருள் விளக்கம்
1. பகைமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hostility, water, anger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சலம் புகன்று சுறவு கலித்த புலவு நீர் வியன் பௌவத்து – மது 112,113 பகைமையை விரும்பிச் சுறாமீன்கள் செருக்கித் திரிகின்ற புலால் (நாறும்)நீரையுடைய அகன்ற கடலிடத்தில், தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 10/90 குளிர்ச்சியான அழகிய பத்துவகைத் துவர்களையும் தேய்த்துக்கொண்டு நீரில் முழுகுவோர் சிலர் சலம் புரி தண்டு ஏந்தினவை – பரி 15/58 சினம் பொருந்திய தண்டாகிய படைக்கலத்தைக் கொண்டிருக்கிறாய்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்