Skip to content

சொல் பொருள்

(வி) 1. மெல்லு, 2. மிதித்து அழி,

சொல் பொருள் விளக்கம்

1. மெல்லு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

masticate, trample

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண
பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி
புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 216-218

வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய
பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து)
முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை

வம்ப வடுகர் பைம் தலை சவட்டி
கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/14,15

புதிய வடுகரின் பசிய தலையை மிதித்து அழித்துக்
கொன்ற யானைகளின் கொம்பு போலத் தோன்றும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *